ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததும் புடினுக்கு 7 முறை போன் செய்த டிரம்ப்?
அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் படுதோல்வியை அடைத்தனர்.
இருப்பினும், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறப் போவதில்லை என்று டிரம்ப் கூறினார்.
இதேவேளை, அதிபர் மாளிகையை டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு டிரம்ப் மீண்டும் அதிபராக தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இதன் காரணமாக அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இவ்வாறானவொரு நிலையில், டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டது முதல் பல முறை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் என்று அமெரிக்க செய்தியாளர் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்து இருக்கிறார்.
புத்தகத்தில் உள்ள தகவல்களின்படி டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடினை கிட்டத்தட்ட 7 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
ஒருவேளை தான் பேசுவதை உதவியாளர்கள் கேட்க கூடாது என்ற காரணத்தால் அவர்களை வெளியேற்றிவிட்டு டிரம்ப் ரஷ்ய அதிபர் படினுடன் பேசினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
அமெரிக்க செய்தியாளரின் புத்தக்கில் இடம்பெற்றுள்ள தகவல்கள் காட்டுத்தீ போல் பரவியது.
இதனையடுத்து, அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், 2024 இறுதியில் நடைபெறும் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் அதிபர் வேட்பாளரான டொனல்ட் டிரம்ப் புத்தகத்தில் உள்ள தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, ரஷ்யா தரப்பில் இருந்தும் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் தொலைபேசியில் பேசவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.