அமெரிக்க கனடிய தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் கனடிய பிரதமர் மார்க் கார்னி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த வாரம் கொரியாவில் நடைபெறும் APEC உச்சி மாநாட்டில் மார்க் கார்னி மற்றும் டொனால்ட் டிரம்ப் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அதுவே இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் பாதையில் கொண்டு வர ஒரு வாய்ப்பாக இருக்கும் எனவும், கனடிய வணிக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எபெக் மாநாட்டில் பிரதமரும் ஜனாதிபதியும் குறைந்தபட்சம் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லும் வாய்ப்பு கிடைக்கும் என கனடிய வர்த்தக பேரவையின் தலைவர் கோல்டி ஹைடர் தெரிவித்துள்ளார்.

அதிலிருந்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை சாதகமான பாதைக்கு திருப்ப முடியுமென நம்புகிறோம் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பிரதமர் கார்னி வெள்ளிக்கிழமை மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டுள்ளார்.
அங்கு அவர் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
ASEAN என்பது பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் தென்கிழக்காசிய நாடுகளின் பிராந்திய அமைப்பு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.