தென் கொரியா செல்லும் ட்ரம்ப் ; வடகொரிய இராணுவத்தின் செயற்பாட்டால் அதிகரிக்கும் பதற்றம்
தென் கொரியாவில் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஆசிய - பசிபிக் பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்ள உள்ள நிலையில், வட கொரியா அதி நவீன ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்துள்ளது.
உலக நாடுகளின் வர்த்தகப் பொருளாதாரத் தடைகளை மீறி, வடகொரிய இராணுவம் அதி நவீன ஏவுகணைகளைத் தயாரித்து சோதனை நடத்தி வருகின்றது.
குற்றம் சுமத்தும் தென்கொரியா
இந்த நிலையில் வடகொரியா இராணுவம், கொரிய தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரையை நோக்கி அதி நவீன ஏவுகணைகளை வானில் ஏவி பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது.
ஆசிய - பசிபிக் பொருளாதார மாநாட்டின் போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் தென் கொரியாவின் ஜனாதிபதி லீ ஜே மூங் ஆகியோரை, ட்ரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.