டிரம்பின் கோல்ஃப் கிளப் ; வியட்நாமில் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் விவசாயிகள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குடும்பத்தினரால் வியட்நாமில் அமைக்கப்படவுள்ள கோல்ஃப் க்ளப் மைதானத்துக்காக 990 ஹெக்டர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த விவசாயிகள் சிறிய தொகை பணம் மற்றும் சில மாதங்களுக்கு தேவையான அரிசி வழங்கப்பட்டு குறித்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
Kinhbac city எனும் வியட்நாம் நிறவனம், ட்ரம்ப் நிறுவனத்துக்கு $5 மில்லியன் உரிம கட்டணம் வழங்கி இந்த கோல்ஃப் மைதான திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
ஒரு சதுர கிலோமீட்டர் நிலத்துக்கு $12 முதல் $30 வரை இழப்பீடு தருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு உரிமையில்லை. காரணம் வியட்நாமில் நிலமானது அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடானது, வியட்நாமின் ஒரு வருட சராசரி ஊதியத்தை விடக் குறைவு.
குறித்த 990 ஹேக்டர் நிலம் வாழைப்பழம், லாங்கள்கன், பயிர்களால் நிறைந்துள்ள நிலையில், ஆடம்பர விளையாட்டுக்காக தலைமுறை தலைமுறையாக அங்கு வசித்து வரும் விவசாயிகளை வெளியேற்றுவது தொடர்பில் பல கண்டனங்கள் எழுந்துள்ளன.