ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க தயாராகும் டிரம்ப்!
உக்ரைனுடன் போர் நிறுத்தம் மற்றும் அமைதி உடன்படிக்கை எட்டப்படும் வரை ரஷ்யா மீது பாரிய அளவிலான பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளை விதிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து ரஷ்யாவுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்திருந்த டொனால்ட் ட்ரம்ப் நேற்றைய தினம் (07) செய்தியாளர்களிடம் கருத்துரைத்த போது குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதேவெளை உக்ரைனின் வலுசக்தி அமைப்புகளை இலக்கு வைத்து ரஷ்யா நேற்றைய தினம் தாக்குதலை நடத்தியிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளை விதிப்பது தொடர்பில் பரிசீலிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ரஷ்யாவின் தாக்குதல் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.