குல்ஃபி வியாபாரியால் மீண்டும் ட்ரெண்டாகும் ட்ரம்ப்!
குல்ஃபி வியாபாரியால் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், ருவிற்றரில் மீண்டும் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப், பதவியேற்றதிலிருந்து ருவிற்றரில் மிகவும் பரபரப்பாக இயங்கினார்.
அவரது உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளால் அடிக்கடி அவர் ருவிற்றர் ட்ரெண்டிங்கில் உலகளவில் முதலிடத்திற்கு வந்துவிடுவார். அப்படித்தான், கொரோனா தொற்று சிகிச்சையாக கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்தலாம் என்று டிரம்ப் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த நிமிடமே அதை விளையாட்டாகக் கூறியதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது மீண்டும் ருவிற்றரில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தானில் குல்ஃபி விற்கும் தொழிலாளி ஒருவர் தனது தொழிலின்போது அவர் பாட்டுப்பாடி குல்ஃபி விற்பார். அவருடைய வெள்ளை நிறத் தலையும் தோற்றமும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஒரு நொடியேனும் நினைவுபடுத்தாமல் இருக்காது.
Wah. Qulfi walay bhai, Kya baat ha کھاۓ بغیر مزا آ گیا pic.twitter.com/YJeimzhboJ
— Shehzad Roy (@ShehzadRoy) June 10, 2021
இந்த நிலையில் அவர் பாட்டுப்பாடி குல்ஃபி விற்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக அதனாலேயே ட்ரம்ப், ருவிற்றரில் மீண்டும் ட்ரெண்டாகத் தொடங்கியிருக்கிறார். அந்த வீடியோவை பாகிஸ்தான் பாடகரும், சமூக ஆர்வலருமான ஷேசாத் ராய் பகிர்ந்திருந்த நிலையில் அந்த வீடியோ வைரலானது.