ஜனாதிபதி தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிடும் ட்ரம்ப்! இது சாத்தியமா?
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அரசியல் வரலாற்றில் நீதிமன்றத்தினால் முதல் முறையாகத் தண்டிக்கப்பட்ட ஒரு முன்னாள் ஜனாதிபதி என்று செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றங்களுக்கும் தண்டனைகள் வழங்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு என்று இச் செய்தியாளர் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காண்பித்துள்ளார்.
அமெரிக்காவின் எழுதப்பட்ட நிகழாத அரசியல் யாப்பின் அடிப்படையில் நிறைவேற்று ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் சிறையில் இருந்தாலும் அல்லது சிறைத் தண்டனை அனுபவித்த ஒருவராக இருந்தாலும் போட்டியிட முடியும் என்று அமெரிக்க வரலாற்றுப் பேராசிரியர் இவான் மோர்கன் கூறியிருக்கிறார்.
சிறையில் இருந்தவாறே அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்களில், 1920இல் போட்டியிட்ட யூஜின் டெப்ஸ் மிக முக்கியமான வேட்பாளர் என்றும் பேராசிரியர் மோர்கன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் ரயில் நிலையச் செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியதால் டெப்ஸ் என்ற தொழிற் சங்கவாதி முதன் முதலில் 1894 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் டெப்ஸ் பல முறைகள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.
1900 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பத்து இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் டெப்ஸ் வெற்றியீட்டியிருந்ததாக பேராசிரியர் மோர்கன் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் மேலும் கூறியிருந்தார்.