ஹமாஸ் அமைப்பிற்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் அமைப்பிற்கு இறுதி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன், தான் சொன்னதை செய்யாவிட்டால் ஹமாஸ் அமைப்பின் எந்த உறுப்பினரும் பாதுகாப்பாகயிருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் தனது வேலையை முடிப்பதற்காக நான் தேவையான அனைத்தையும் அனுப்புகின்றேன் என தெரிவித்துள்ள டிரம்ப், நான் சொல்வதை செய்யாவிட்டால் ஹமாசின் ஒரு உறுப்பினர் கூட பாதுகாப்பாகயிருக்கமுடியாது என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் நரகத்திற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் என்றும், அனைத்து பணயக்கைதிகளையும் விடுதலை செய்யுங்கள், நீங்கள் கொலை செய்தவர்களின் உடல்களை திருப்பிதாருங்கள் இல்லாவிட்டால் உங்கள் கதை முடிவிற்கு வந்துவிடும் எனவும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது காசா பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், காசா மக்களே உங்களிற்கு மிகவும் அழகான எதிர்காலம் காத்திருக்கின்றது, பணயக்கைதிகளை வைத்திருந்தால் நீங்கள் மரணிக்கவேண்டிய நிலையேற்படும் எனவும் கூறியுள்ளார்.