சம்சுங் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
ஐபோன் நிறுவனத்தை தொடர்ந்து அதன் முக்கிய தொழில் போட்டியாளரான சம்சுங் நிறுவனத்திற்கும் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசுகையில், "வரி விதிப்பு அப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, சம்சுங் மற்றும் இதுபோன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் எந்த நிறுவனத்திற்கும் பொருந்தும்.
இல்லையெனில், அது நியாயமாக இருக்காது. அவர்கள் இங்கு தொழிற்சாலை அமைத்தால், வரி இருக்காது. இந்த நடவடிக்கை அமெரிக்காவில் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது" என்று கூறினார்.
சம்சுங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை முக்கியமாக வியட்நாம், இந்தியா, தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்கிறது.
இந்த வரி விதிப்பு, குறிப்பாக வியட்நாமில் உற்பத்தி செய்யப்படும் சம்சுங் ஸ்மார்ட்போன்களுக்கு 46% வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.