ஈரான் மீது அழிவுகரமான ஆயுதங்களுடன் களத்தில் குதிக்கும் ட்ரம்ப்
தற்போது தீவிரமடைந்து வரும் மத்திய கிழக்கு மோதலில் அமெரிக்கா தோல்வியடைந்தால் அதன் விளைவுகள் உலக வரலாற்றையே மாற்றக்கூடியதாக இருக்கும் என கனடாவை தளமாகக் கொண்ட அரசியல் விமர்சகர் கிருஷ்ணர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்ற நிலை உலக அரசியலில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிட்டார்.
ஈரான் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், அந்த நாடு பலம் பெறும் சூழல் உருவானால், பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் அபாயம் காணப்படுவதாக கூறினார்.
இதன் காரணமாகவே ஈரானை கட்டுப்படுத்த வேண்டும் என்ற பார்வை சிலரிடத்தில் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மக்களின் நலனைக் காட்டிலும் மதத்தை முன்னிலைப்படுத்தும் அரசியல் அணுகுமுறைகளே உலகளாவிய மோதல்களுக்கும் அழிவுகளுக்கும் வழிவகுக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் இந்த நெருக்கடி நிலை குறித்து சர்வதேச மட்டத்தில் கவனம் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் விமர்சனங்களும் கருத்துக்களும் வெளியாகி வருகின்றன.