7,50,000 அமெரிக்க டொலர்களை இழந்த டிரம்ப்!
இலாப நோக்கமற்ற நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்திய வழக்கை முடித்துவைக்க 7,50,000 அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்குவதாக டிரம்பின் (Donald Trump) ஜனாதிபதி பதவியேற்பு குழு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் (Donald Trump) , தனது பதவியேற்பு விழாவுக்காக கிடைத்த இலாப நோக்கமற்ற நிதியை தன்னுடைய குடும்பத்தை வளப்படுத்த செலவு செய்ததாக ஜோ பைடனின் (Joe Biden) நிர்வாகம் குற்றம் சுமத்தியது.
இது தொடர்பாக வாஷிங்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் டிரம்ப் (Donald Trump) தரப்பு தம் மீதான குற்றச்சாட்டை மறுத்து வந்தது.
இந்த நிலையில் இலாப நோக்கமற்ற நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்திய இந்த வழக்கை முடித்துவைக்க 7,50,000 அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்குவதாக டிரம்பின் (Donald Trump) ஜனாதிபதி பதவியேற்பு குழு அறிவித்துள்ளது.
இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள வாஷிங்டன் அட்டார்னி ஜெனரல் கார்ல் ரேசின், டிரம்ப் (Donald Trump) தரப்பிடம் இருந்து பெறப்படும் இந்த தொகை வாஷிங்டனில் செயல்படும் இலாப நோக்கமற்ற 2 நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.