அமெரிக்க ஏஐ ஆலோசகராக இந்திய வம்சாவளி நபரை பரிந்துரைத்த டிரம்ப்!
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்டு டிரம்ப், செயற்கை நுண்ணறிவு துறைக்கான கொள்கை ஆலோசகர் பதவிக்கு இந்திய அமெரிக்க தொழிலதிபர் ஸ்ரீராம் கிருஷ்ணனை பரிந்துரை செய்துள்ளார்.
தொழில்நுட்பத் துறையை சேர்ந்தவரான ஸ்ரீராம் கிருஷ்ணன் டேவிட் சாக்ஸ் உடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன், டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்ப துறையின் கொள்கை ஆலோசகராக இருப்பார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் ஏஐ-இல் தொடர்ந்து அமெரிக்கத் தலைமையை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவார்.
மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதியின் ஆலோசகர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உட்பட, ஏஐ கொள்கையை வடிவமைக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவுவார் என டிரம்ப் கூறினார்.
முன்னதாக ஸ்ரீராம் கிருஷ்ணன் மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாஹூ, பேஸ்புக் மற்றும் ஸ்னாப் என பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
புதிய பொறுப்பு குறித்து பேசிய ஸ்ரீராம் கிருஷ்ணன், "ஏ.ஐ. துறையில் அமெரிக்காவை தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்து, நாட்டிற்கு சேவையாற்ற இருப்பது பெருமையான உணர்வை கொடுக்கிறது என தெரிவித்துள்ளார்.