டிரம்பின் உத்தரவினால் வருடாந்தம் 5 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேச உதவிகளை இடைநிறுத்தியதன் காரணமாக மலேரியா தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் சர்வதேச அளவில் இடம்பெற்றுவந்த மருத்துவ சுகாதார ஆராய்ச்சிகள் பாதிக்கப்பட்டு;ள்ளமைக்கு இது ஒரு உதாரணம் என கார்டியன்தெரிவித்துள்ளது.
புதிய நவீன தடுப்பு மருந்து
புதிய நவீன தடுப்பு மருந்துகளை உருவாக்குவதன் மூலம் மலேரியாவினால் சிறுவர்கள் உயிரிழப்பதை தடுக்கும் முயற்சியில் யுஎஸ்எயிட்டின் மலேரியா தடுப்பு அபிவிருத்தி திட்டம் ஈடுபட்டுள்ளது.
மலேரியா தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு எம்விடிபி நிதி உதவியை வழங்குகின்றது.
டொனால்ட் டிரம்ப்பும் அதிகாரிகளும் அமெரிக்காவின் வெளிநாட்டு உதவியை நிறுத்திவைப்பதற்கு உத்தரவிட்டதை தொடர்ந்து யுஎஸ்எயிட்டின் மலேரியா தடுப்பு அபிவிருத்தி திட்டம் தனது சகாக்கள் மலேரியா தடுப்பு மருந்து தொடர்பான திட்டங்களை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
தடுப்பு மருந்துகளை உருவாக்கும் திட்டத்தை இடைநடுவில் கைவிட்டால் எயிட்ஸ் போன்ற நோய்கள் பரவும் ஆபத்து அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுவரை காலமும் மருத்துவதுறையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகில் மலேரியா பாதிப்பு அதிகமாக காணப்படும் பகுதிகளில் இந்த நோயினால் குழந்தைகள் உயிரிழப்பதை கட்டுப்படுத்துவதே யுஎஸ்எயிட்டின் மலேரியா தடுப்பு அபிவிருத்தி திட்டத்தின் நோக்கம்.
வருடாந்தம் ஐந்து இலட்சம் குழந்தைகள் உயிரிழப்பு
ஆபிரிக்காவின் சகாரா பகுதிகளில் வருடாந்தம் ஐந்து வயதிற்கு உட்பட்ட ஐந்து இலட்சம் குழந்தைகள் மலேரியாவால் உயிரிழக்கின்றன.
2024 இல் மலேரியா தடுப்புமருந்துகள் இரண்டு வெளியாகியிருந்தன இந்த முயற்சிக்கு பெரும் பாராட்டு கிடைத்தது.
இந்த நிலையில் மலேரியா தடுப்புமருந்துகளை மேலும் பயனுள்ளவையாகவும் நிலைத்து நீடிக்க கூடியவையாகவும் மாற்றும் முயற்சியில் யுஎஸ்எயிட்டின் மலேரியா தடுப்பு அபிவிருத்தி திட்டம் ஈடுபட்டிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே டிரம்ப் சர்வதேச உதவிகளை இடைநிறுத்தியதன் காரணமாக மலேரியா தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.