ballroom கட்ட பணம் கொடுத்தவர்களுக்கு டிரம்ப் விருந்து !
வெள்ளை மாளிகையில் விருந்து மண்டபம் (ballroom) கட்டப் பணம் கொடுத்த செல்வந்தர்களுக்கும், பெரிய நிறுவனங்களுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) விருந்து கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
விருந்து மண்டபம் கட்டுவதற்கான செலவு 250 மில்லியன் டாலர் செலவானதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் Amazon, Apple, Meta, Google, Microsoft, Palantir ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் அந்தச் சிறப்பு விருந்துக்கு அழைக்கப்பட்டனர்.
Crypto முதலீட்டுத் தளமான Gemini நிறுவனர்கள் கேமரோன் விங்கள்வோஸ் (Cameron Winklevoss), டைலர் விங்கள்வோஸ் (Tyler Winklevoss) இரட்டைச் சகோதரர்களின் பெயரும் பட்டியலில் உள்ளது.
இதன்போது நிறுவனங்கள், தனிநபர்களின் தாராள மனத்தை வெகுவாகப் பாராட்டினார் திரு டிரம்ப். முழுக்க முழுக்கத் தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து மட்டுமே விருந்து மண்டபம் கட்டப்படும் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அதேவேளை YouTube நிறுவனம் டிரம்ப்பின் கணக்கை முடக்கியதால் ஏற்பட்ட சர்ச்சையில் அவருக்கு ஈடுதொகையாகக் கொடுக்கப்பட்ட 21 மில்லியன் டாலரையும் ballroom கட்ட டிரம்ப் பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.