ஆட்சியை இழந்த ட்ரம்ப், புடினின் நெருங்கிய நண்பர்!
ஹங்கேரியில் நாடாளுமன்றத் தேர்தலில் ட்ரம்ப், புடினின் நெருங்கிய நண்பர் விக்டர் ஓர்பன் தோல்வியடைந்துள்ளார்.
ஹங்கேரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் விக்டர் ஓர்பனின் முன்னாள் கூட்டாளியும், எதிர்க்கட்சியான டிஸ்ஸா கட்சியின் தலைவருமான பீட்டர் மாக்யார் வெற்றிபெற்றார்.

199 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் டிஸ்ஸா கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தனது தோல்வியை விக்டர் ஓர்பன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, ஹங்கேரியின் பிரதமராக பீட்டர் மாக்யார் விரைவில் பதவியேற்க உள்ளார். மாக்யாரின் டிஸ்ஸா கட்சி ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, ஓர்பனின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
தவிர, இந்த முடிவு அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும், ரஷ்ய அதிபர் புடினுக்கும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. காரணம், அவர்கள் இருவரின் மிக நெருங்கிய கூட்டாளியாக இருப்பவர், விக்டர் ஓர்மன்.
பொருளாதார மந்தநிலை, அதிகரித்த செலவினங்கள், சிறுபான்மையினர் உரிமைகள், ஊடகச் சுதந்திர மீது கடுமையான அடக்குமுறைகள் ஆகியன விக்டர் ஓர்மனின் தோல்விக்குக் காரணங்களாகக் கூறப்படுகிறது.
ஓர்பனின் தோல்வி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது என்றே கூறப்படுகிறது. ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஹங்கேரியின் விரோதப் போக்கிற்கு ஒரு முடிவு வரும் என்று அது நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்தது.