கனடிய பிரதமரை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்:

Donald Trump Canada
By Kamal Mar 11, 2026 07:17 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடிய பிரதமர் மார்க் கார்னியை மீண்டும் ஒருமுறை "ஆளுநர்" (Governor) என அழைத்து வம்புக்கு இழுத்துள்ளார்.

கனடாவை அமெரிக்காவின் ஒரு மாநிலம் போலச் சித்தரிக்கும் ட்ரம்பின் இந்தத் தொடர் கிண்டல், அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், ஆசிய கெண்டை மீன்களிடமிருந்து (Asian Carp) 'மகா ஏரிகளை' (Great Lakes) பாதுகாப்பது குறித்து அமெரிக்க மாநில ஆளுநர்களுடன் இணைந்து செயல்படுவது பற்றி குறிப்பிட்டிருந்தார்.

கனடிய பிரதமரை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்: | Trump Referred To Carney As Future Governor

அதில், மார்க் கார்னியை "கனடாவின் வருங்கால ஆளுநர்" (Future Governor of Canada) என்று அவர் சாடியுள்ளார். மார்க் கார்னியை ட்ரம்ப் ஆளுநர் என அழைப்பது இது முதல் முறையல்ல.

கடந்த ஜனவரி மாதம், சீனாவுடனான கனடாவின் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பதிவிட்ட ட்ரம்ப், "ஆளுநர் கார்னி, கனடாவை சீனாவின் பொருட்களை அமெரிக்காவிற்குள் அனுப்பும் ஒரு தளமாக மாற்ற நினைக்கிறார்" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதேவேளை, ட்ரம்பின் இந்தக் கிண்டல்கள் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் கார்னி, "யாரோ ஒருவர் பதிவிடும் ஒவ்வொரு ட்வீட் அல்லது கருத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது; இதை என்னால் கையாள முடியும்," என நிதானமாகப் பதிலளித்துள்ளார்.

கடந்த 2025 அக்டோபரில் நடைபெற்ற 'அமைதி உச்சிமாநாட்டின்' போது, ட்ரம்ப் தவறுதலாக கார்னியை கனடாவின் "ஜனாதிபதி" (President) என அழைத்தார்.

அப்போது நகைச்சுவையாகப் பேசிய கார்னி, "என்னை ஜனாதிபதி பதவிக்கு தரம் உயர்த்தியதற்கு நன்றி" என்று கிண்டலாகக் கூறினார்.

அதற்கு ட்ரம்ப் சிரித்துக்கொண்டே, "பரவாயில்லை, நான் உம்மை ஆளுநர் என்று சொல்லவில்லையே" எனப் பதிலளித்திருந்தார். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US