ட்ரம்பின் கருத்தால் வந்த வினை ; இங்கிலாந்து பிரதமர் கடும் கண்டனம்
டென்மார்க்கின் தன்னாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை கைப்பற்ற நினைக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பை ட்ரம்ப் விமர்சித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, நேட்டோ அமைப்பில் அமெரிக்காவை தவிர பிறநாடுகளின் படைகள் முக்கிய பங்காற்றவில்லை.

ட்ரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்
ஆப்கானிஸ்தான் போரில் முன்களத்தில் அமெரிக்க படையினரே இருந்தனர், பிற நாடுகளின் படையினர் முன்களத்தில் இல்லை. நேட்டோ அமைப்பில் பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கவில்லை. அவர்கள் நமக்கு தேவையும் இல்லை என்றார்.
ட்ரம்பின் கருத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, டிரம்ப்பின் பேச்சு நேட்டோ மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டையும் அவமதிப்பதாக உள்ளது.
அந்த கருத்து அவமானகரமானவை மற்றும் வெளிப்படையாகவே அதிர்ச்சியூட்டுபவை. இதற்கு ட்ரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
அதேபோல் இங்கிலாந்து இளவரசர் ஹாரி கூறும் போது, "ஆப்கானிஸ்தானில் நான் பணியாற்றினேன். அங்கு வாழ்நாள் முழுவதும் நண்பர்களை உருவாக்கினேன். அங்கு நண்பர்களை இழந்தேன். நேட்டோ துருப்புக்களின் தியாகங்களைப் பற்றி உண்மையாகவும் மரியாதையுடனும் பேசப்பட வேண்டும் என்றார்.