ட்ரம்பின் வேட்டை ஆரம்பம் ; வெனிசுலா நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு எண்ணெய்
சர்வதேச எரிசக்தி சந்தையில் ஒரு முக்கிய திருப்பமாக, வெனிசுலா நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு மீண்டும் எண்ணெய் வணிகம் தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக சுமார் 50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை
இந்த வணிகம் முழுவதுமாக தற்போதைய சர்வதேச சந்தை விலையிலேயே நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் எண்ணெய் விநியோகத்திற்காக வெனிசுலாவில் உள்ள இதர முன்னணி எண்ணெய் நிறுவனங்களுடன் அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த முடிவின் மூலம் அமெரிக்காவின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் நிலவும் ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்தவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காலத் தடைகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ள இந்த வர்த்தக உறவு, உலக பொருளாதாரத்திலும் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.