அமரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பு ; மனைவியுடன் நேரில் சென்ற முகேஷ் அம்பானி !
அமெரிக்க அதிபராக டிரம்ப் இன்று (20) பதவியேற்கும் நிலையில், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இன்று பதவியேற்கும் நிலையில், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபராக 2 ஆவது முறை பதவியேற்கும் டிரம்ப்
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டெனால்டு டிரம்ப்பை, ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியும் ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீட்டா அம்பானியும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபராக 2 ஆவது முறை பதவியேற்க உள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள், உலக பணக்காரர்கள், தொழிலாதிபர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து உலக பணக்காரர் முகேஷ் அம்பானியும் நீட்டா அம்பானியும் வாஷிங்டனுக்கு சென்றுள்ளனர்.
அங்கு, பதவியேற்புக்கு முந்தைய விழாவில் டெனால்டு ட்ரம்ப்பை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். அப்போது, முகேஷ் அம்பானியின் பெயரை கூறி நன்றி டிரம்ப் தெரிவித்தார்.