இன்று அமுலாகவுள்ள ட்ரம்பின் புதிய சட்டத்தால் பேராபத்து ; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டொனால்ட் ட்ரம்பின் வரி குறைப்பு சட்டமூலம் சட்டமாக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கான ஆவணத்தில் ட்ரம்ப் இன்று ( 04) கையெழுத்திட உள்ளார்.
இந்த சட்டமூலத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட நிலையில் இன்றைய தினம் ட்ரம்ப் ஆவணத்தில் கையெழுத்திட உள்ளார்.
பராக் ஒபாமா வேதனை
இன்று மாலை 5 மணிக்கு அவர் இந்த சட்டமூலத்தில் கையெழுத்திட இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மசோதா நிறைவேற்றப்படுவதைத் தடுக்க ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் அவையில் பேசுகையில், "இந்த மசோதா அமெரிக்க மக்களின் வாழ்க்கையை அழிக்கும். இது ஒரு அருவருப்பான மற்றும் ஆபத்தான மசோதா" என்று கூறினார்.
இந்த மசோதாவால் 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என முன்னாள் அதிபர் ஒபாமாவும் வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.