கூட்டத்தில் பொப் பாடகி நிக்கி மினாஜ் குறித்த டொனால்ட் ட்ரம்பின் பேச்சால் சர்ச்சை
இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டார்.
அவருடன் பிரபல பொப் பாடகி நிக்கி மினாஜும் (Nicki Minaj) 'ஏர் போர்ஸ் ஒன்' (Air Force One) சிறப்பு வானூர்தியில் விருந்தினராக வருகை தந்தார்.

பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டொனால்ட் ட்ரம்ப், நிக்கி மினாஜ் குறித்து ஒருமையில் கருத்து தெரிவித்ததோடு, பின்னர் அவர் தன்னை அவமதித்திருக்க மாட்டார் என நம்புவதாகவும் கூறி உடனடியாக மன்னிப்பும் கோரினார்.
அத்துடன், நிக்கி மினாஜ் வானூர்தியில் வருகை தந்தபோது வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் பதவிக்காக நேர்காணல் செய்வது போல் ஒரு காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மிச்சிகன் செனட் தேர்தல் களத்தில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அப்துல் எல்-சயீத் (Abdul El-Sayed) குறித்து ட்ரம்ப் தனது உரையில் கடுமையான இஸ்லாமிய வெறுப்புப் பிரசாரக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.