இந்தியா - பாகிஸ்தான் பதற்றம் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் ஒரு மோசமான தாக்குதல் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸின் இறுதி சடங்கிற்காக ரோமுக்கு பயணம் செய்தபோது செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறுகையில்,
மிகக் கொடிய தாக்குதல்
இது சமீபத்திய காலங்களில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த மிகக் கொடிய தாக்குதலாகும். நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், பாகிஸ்தானுடனும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், உங்களுக்குத் தெரியும்.
மேலும் அவர்கள் காஷ்மீரில் 1,500 ஆண்டுகளாக அந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் அநேகமாக அதை விட நீண்ட காலம் இருக்கலாம். இரு நாட்டு தலைவர்களையும் நான் அறிவேன்.
அவர்கள் இதற்கு ஒரு வழியிலோ அல்லது வேறு வழியிலோ தீர்வை கண்டுபிடித்துவிடுவார்கள். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எப்போதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
#WATCH | On #PahalgamTerroristAttack, US President Donald Trump says, "I am very close to India and I'm very close to Pakistan, and they've had that fight for a thousand years in Kashmir. Kashmir has been going on for a thousand years, probably longer than that. That was a bad… pic.twitter.com/R4Bc25Ar6h
— ANI (@ANI) April 25, 2025