கனடாவுடனான வர்த்தகப் போரை தீவிரப்படுத்த விருக்கும் டொனால்ட் ட்ரம்ப்
கனடாவுடனான வர்த்தகப் போரை தீவிரப்படுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு விநியோகம் செய்யும் மின்சாரத்துக்கு ஒன்டாரியோ 25% வரி விதித்ததன் காரணமாக, கனடா மீது மேலும் வரி விதிக்குமாறு உத்தரவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கனடா மீது மேலும் 25% வரியை விதிக்க நான் வர்த்தக செயலாளரை உத்தரவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒன்டாரியோ முதல் அமைச்சர் டக் ஃபோர்ட், திங்கள்கிழமை அமெரிக்காவுக்கு அனுப்பும் மின்சாரத்துக்கு 25% கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தார்.
இதனால் நியூயார்க், மிச்சிகன், மின்னசோட்டா ஆகிய வடக்கு அமெரிக்க மாநிலங்களில் உள்ள 1.5 மில்லியன் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் நேரடியாக பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க மக்களுக்கும் தொழில்களுக்கும் அதிக செலவை உருவாக்கும் இந்த வரிகள், அமெரிக்க பொருளாதாரத்துக்கு பேரழிவாக இருக்கும்," என திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கான மின்சாரத்தையே முற்றிலும் துண்டிக்க தயங்கப் போவதில்லை என அவர் முலும் குறிப்பிட்டுள்ளார்.