கனடா மீது பெப்ரவரியில் விதிப்பு
கனடாவின் ஏற்றுமதிகள் மீது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டது முதல் பல்வேறு நிறைவேற்ற அதிகார உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார்.
கனடா மற்றும் மெக்சிகோமீது 25 வீத வரியை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கனடா எல்லைப் பகுதியை மோசமாக துப்பியோகம் செய்வதாகவும் போதை பொருட்கள் கடத்தப்படுவதாகவும், சட்டவிரோத குடியேறிகள் பிரவேசிப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
உலகின் ஏனைய நாடுகள் மீதும் வரி விதிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.