அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை ; ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்
ஈரானில் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
கடந்த மூன்று இரவுகளாக ஈரானை கடுமையாக அமெரிக்கா தாக்கி வருகிறது. இந்தபோதிலும் நாங்கள் இப்போது நன்றாகப் பழகி வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.

கத்தார் வழங்கிய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் வடக்கு தோஹாவுக்கு அதிபர் ட்ரம்ப் பயணம் மேற்கொண்ட போது செய்தியாளர்களுடன் ஈரான் உடனான பேச்சுவார்த்தை குறித்து பேசிய அவர், '
'ஈரானில் அணு ஆயுத நீக்க நடவடிக்கை நேர்மறையாக நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று இரவுகளாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருந்தாலும், அந்நாட்டுனான உறவு சுமூகமாகவே உள்ளது.
போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையும் முன்னேற்றப்பாதையில் உள்ளது'' எனக் குறிப்பிட்டார். மேலும், இரு நாடுகளுக்கு இடையே முன்பு இருந்த பதற்றமான சூழல் தற்போது இல்லை என்றும் அணு ஆயுதங்களற்ற ஈரானை உருவாக்கும் முயற்சியே தற்போதைய குறிக்கோளாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஈரான் - அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கத்தாரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இரு தரப்பில் இருந்தும் சுமூகமான இடத்தை நோக்கி நகரும்படியான கோரிக்கைகளை முன்வைத்தாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக இரு தரப்பினருக்கும் இடையே இதற்கு முன் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்குப் பிறகு, தெஹ்ரானுடனான உறவுகளைக் கையாள்வதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, மறைமுக மற்றும் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.