அமெரிக்காவின் கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்
அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா கல்விக்காக அதிக நிதியை ஒதுக்கீடு செய்கின்றது . எனவே, நாட்டின் செலவினங்களைக் குறைப்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் , இவ்விடயம் குறித்து அந்நாட்டு காங்கிரஸின் ஒப்புதலைப் பெறுவது அவசியம் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.