இனி அது ஹோர்முஸ் இல்லை.. ட்ரம்ப் நீரிணை ; சர்ச்சையை கிளப்பும் அமெரிக்க ஜனாதிபதி
ஹோர்முஸ் நீரிணையை ட்ரம்ப் நீரிணை எனக் குறிப்பிட்ட ஒரு வரைபடத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (செப். 26) பதிவிட்டிருக்கிறார்.
ஈரான் - அமெரிக்கா இடையே தொடங்கிய போர் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களின் விளைவாக உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது.
இதனால், உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவி வருகின்றன.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர பல நாடுகள் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வளைகுடா நாட்டின் வரைபடத்தில் ஹோர்முஸ் நீரிணை உள்ள பகுதியை வட்டமிட்டு, அதனை ட்ரம்ப் நீரிணை என்று குறிப்பிட்டுள்ள ஒரு படத்தை டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதி என ட்ரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.