ஒரே பதிவால் பீதியை கிளப்பிய ட்ரம்ப் ; ஈரானுக்கு காத்திருக்கும் சிக்கல்
ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடுப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக வரும் செய்திகளுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.
அணுசக்தி திட்டம் காரணமாக மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து போர் நடத்தி வரும் நிலையில், அமைதி பேச்சுக்காக தற்போது தற்காலிகமாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இரு தரப்பும் மாறி மாறி நிபந்தனை விதிப்பதும், அதை ஏற்க மறுப்பதும் தொடர்வதால் அமைதி பேச்சில் இழுபறி நீடிக்கிறது. தற்போதைய ராஜதந்திர முயற்சிகள் தோல்வியுற்றால், ஈரானுக்கு எதிராக மீண்டும் ராணுவ நடவடிக்கை தொடங்க அமெரிக்கா பரீசிலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அணுசக்தி திட்டத்தை ஈரான் 20 ஆண்டு நிறுத்தினால் ஏற்போம்; சொல்கிறார் டிரம்ப் இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.
ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தில், கொந்தளிப்பான கடலில் பயணிக்கும் போர்க் கப்பல்களுக்கு முன்னால் நின்றுகொண்டு, டிரம்ப் கேமராவை நோக்கி சுட்டிக்காட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது.
அந்த வரைபடத்தில் உள்ள பல கப்பல்களில் ஈரானியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. அதனுடன் 'புயலுக்கு முந்தைய அமைதி' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
மேலும், புயல் வீசும் கடல் மற்றும் ராணுவக் கப்பல்களின் பின்னணியில், டிரம்புக்கு அருகில் ஒரு அமெரிக்கக் கடற்படைத் தளபதி நிற்பது போலவும் அந்த வரைபடத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்த பதிவு பேசும் பொருளாகி உள்ளது. இதற்கிடையில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர், 'எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்க ஈரானின் ராணுவம் தயாராக உள்ளது.
அவர்கள் ஆச்சரியப்படுவார்கள். தவறான உத்தியும் தவறான முடிவுகளும் எப்போதும் தவறான விளைவுகளுக்கே வழிவகுக்கும். இதை முழு உலகமும் ஏற்கனவே உணர்ந்துவிட்டது'' என தெரிவித்துள்ளார்.