எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை ; ஈரானுடனான போர் குறித்து ட்ரம்பின் தகவல்
ஈரானுடன் இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சீனா, ரஷ்யாவின் எந்தவித ஒத்துழைப்பும் வொஷிங்டனுக்குத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருடன் நடைபெறவுள்ள முத்தரப்புச் சந்திப்பிற்கு முன்னதாக, சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரில் வெளிநாட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமெரிக்க ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், "எமக்கு எவ்வித உதவியும் தேவையில்லை.
நாம் அவர்களின் கடற்படையைத் தோற்கடித்துள்ளோம், விமானப்படையைத் தோற்கடித்துள்ளோம், அத்துடன் அவர்களின் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் செயலிழக்கச் செய்துள்ளோம்" எனக் குறிப்பிட்டார்.
மேலும், ஈரான் வசமிருந்த ஏவுகணைகளின் கையிருப்பு தற்போது 12 முதல் 13 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், அவர்கள் உடன்படிக்கையொன்றிற்கு வர விரும்புவதால் தாம் எவரிடமும் உதவி கோரப்போவதில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதன்போது தெரிவித்தார்.