டிரம்ப் விதித்த வரி ; ஒரே நாளில் சுமார் 18பில்லியன் இழந்த மெட்டா!
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகளால் மீட்டா(பேஸ்புக்) ஒரே நாளில் சுமார் 18பில்லியன்( மில்லியன் அல்ல பில்லியன்) டாலர்களை இழந்துள்ளது. அத்துடன் பல அமெரிக்க கம்பெனிகளின் பங்குகள் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒட்டு மொத்தமாக உலகில் உள்ள 500 மிக மிக முக்கியமான பெரிய செல்வந்தர்களின் கம்பெனிகள் பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது. 209பில்லியன் டாலர்களை அவர்கள் இழந்துள்ளார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
மிகவும் கேவலமான வரி விதிப்பு
2020ம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக, உலகிந் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது. அதற்கு பின்னர் ஏற்பட்ட பெரும் சரிவாக இது பார்கப்படுகிறது.
இந்நிலையில் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தம் மீது விதிக்கப்பட்டுள்ள மேலதிக வரிகளுக்கு பதிலடி கொடுக்க உள்ளது. இதனால் அமெரிக்காவில் இருந்து வரும், பொருட்களுக்கு வரி அதிகரிக்க உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்த நடவடிக்கையை, வல்லுனர்கள் மற்றும் வணிக ஆய்வாளர்கள், மிகவும் கேவலமான வரி விதிப்பு என்று வர்ணித்து வருகிறார்கள்.