சீனா மீது 500வீத வரி விதிக்கும் டிரம்ப்
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்காக, சீனா மீது 500வீத வரியை விதிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அதிகாரத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது.
ட்ரம்பின் இந்த அதிகாரத்திற்கு ஆதரவளிக்க, 85 செனட்டர்கள் தயாராகியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எண்ணெய்யை கொள்வனவு
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவில் ஈடுபட்டு வரும், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப கூடுதல் வரிகளை விதித்துள்ளார்.
அத்துடன் ரஷ்ய எண்ணெய்யை கொள்வனவு செய்தமைக்காக சீனா மற்றும் இந்தியாவை ட்ரம்பின் அரசாங்கம் தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில் அமெரிக்க திறைசேரி செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யை நீண்ட காலத்திற்கு கொள்வனவு செய்யப்போவதில்லை என, இந்தியப் பிரதமர் தமக்கு உறுதியளித்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.