சுவிஸ் செல்ல டிரம்ப் சென்ற விமானத்தில் கோளாறு ; அவசரமாக தரையிறக்கம்!
டிரம்ப் பயணித்த ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் சிறிய அளவில் மின்சார (எலக்ட்ரிக்கல்) கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தறையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸில் தற்போது உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

மாற்று விமானத்தில் டிரம்ப்
அந்த வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இதில் கலந்து கொள்கிறார். இதற்காக டொனால்டு டிரம்ப், தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டார்.
இந்த விமானம் புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு திரும்பியது.
விமானம் திடீரென திரும்பி வந்ததால், அதிபர் டிரம்பின் பாதுகாப்பு வாகனக் கான்வாய் அவசர அவசரமாக வாஷிங்டனுக்கு அருகே உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் தளத்தை நோக்கி விரைந்தது.
இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அமெரிக்க விமானப்படை தளத்தில் ஏர்போர்ஸ் ஒன் விமானம் தரையிறங்கியதும், மாற்று விமானத்தில் டிரம்ப் உடனடியாகப் புறப்பட்டு சென்றார்.
டிரம்ப் பயணித்த ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் சிறிய அளவில் மின்சார (எலக்ட்ரிக்கல்) கோளாறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.