உடனடியாக நிறுத்த வேண்டும் ; ஈரானிடம் ட்ரம்ப் முன்வைத்துள்ள கோரிக்கை
ஈரானில் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதிப்பதை நிறுத்த வேண்டும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானில் போர் தொடங்குவதற்கு முன் உள்நாட்டு போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஈரான் அரசு மரண தண்டனை விதிப்பது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ட்ரம்ப் தனது ட்ருத் சோசியல் சமூக ஊடகப் பதிவில், “வீழ்ச்சியடைந்து வரும் ஈரான் தனது ராணுவத்தின் பெரும்பாலான பிரிவினருக்கு ஊதியம் வழங்கவில்லை.
அதேநேரம், போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபடாத நேரத்திலும் கூட முன்னெப்போதும் இல்லாத அளவில் அவர்களை ஈரான் கொன்று குவித்து வருகின்றது.
இது மிகப்பெரிய மனித உரிமைக்கு எதிரான செயல். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.