ஹாலிபெக்ஸில் இடம் பெற்ற விமான விபத்து தொடர்பில் விசாரணை
கனடாவின் ஹாலிபெக்ஸ் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து பாதுகாப்பு சபையினால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று ஹாலிபாக்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது தீப்பற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவம் பயணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விபத்தினை தொடர்ந்து விமான நிலையத்தின் செயல்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. விமான பயணங்கள் குறிப்பிட்ட நேரம் வரையில் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து கண்டறிவதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விமானத்தில் 73 பேர் பயணம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்மைய நாட்களாக உலகில் விமான விபத்து சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் இந்த ஹாலிபெக்ஸ் விபத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.