கனேடிய மாகாணம் ஒன்றில் கொரோனாவைத் தொடர்ந்து பரவும் காசநோய்
கனேடிய மாகாணம் ஒன்றில் கொரோனா அதிக அளவில் பரவி வரும் நிலையில், தற்போது புதிதாக காச நோயும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு Saskatchewanஇலுள்ள Black Lake மற்றும் Fond Du Lac பூர்வக்குடியினரிடயே ஆறு முதல் ஏழு பேருக்கு வரை காச நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
The Athabasca Health Authority (AHA) அதிகாரிகள், தாங்கள் உடனடியாக நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டாலும், தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கிறார்கள்.
காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான சிகிச்சையளிக்காவிட்டால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுவிட்டால் நிலைமை மோசமாகிவிட வாய்ப்புள்ளதால் பாதிக்கப்பட்டவர்களை கவனமாக கண்காணிப்பது அவசியமாகும்.