துருக்கி பூகம்பம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
துருக்கியில் இன்று ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், அயல் நாடான சிரியாவிலும் குறைந்தபட்சம் 237 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் சிரியாவின் எல்லை அருகில் 7.8 ரிக்டர் மற்றும் 6.7 ரிக்டர் உட்பட 4.7 ரிக்டர்களுக்கு மேற்பட்ட 10 பூகம்பங்கள் இன்று ஏற்பட்டன. துருக்கி ஏற்பட்ட பூகம்பத்தின் அதிர்வுகள் சைப்பிரஸ் தீவு மற்றும் எகிப்திலும் உணரப்பட்டன.
துருக்கியில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் பூகம்பத்தினால் துருக்கியில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை, துருக்கியில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக, சிரியாவின் அரச கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் மாத்திரம் குறைந்தபட்சம் 237 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 600 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.