துருக்கி பூகம்பம்; ஐந்தறிவு ஜீவனை தத்தெடுத்த தீயணைப்பு வீரர்!
துருக்கி பூகம்ப இடிபாடுகளில் இருந்து 129 மணி நேரத்திற்கு பின்னர் மீட்டெடுத்த பூனை ஒன்றை தீயணைப்பு வீரர் ஒருவர் தத்தெடுத்துள்ளார்.
அவரின் இந்த செயலால், உலகெங்கும் உள்ள விலங்குப் பிரியர்களின் உள்ளங்களை அவர் கவர்ந்துள்ளார்.
துருக்கியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் அலி காக்காஸ் (33). இவர், பூகம்ப இடிபாடுகளில் உயிருடன் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, 129 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளில் சிக்கியிருந்த கறுப்பு-வெள்ளை நிறம் கொண்ட பூனை ஒன்றை அலி காக்காஸ் மீட்டெடுத்தார். தொடர்ந்து, அந்த பூனை அவரைப் பின்தொடர்ந்து சென்றது.
இரவு முழுவதும் இடிபாடுகளில் உயிருடன் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அலி காக்காஸ் ஈடுபட்டிருந்தபோதும், அந்தப் பூனை அவரை விலகவில்லையாம் . இறுதியில், அந்தப் பூனையை அலி காக்காஸ் தத்தெடுத்துக் கொண்டார்.
இதுகுறித்து அலி காக்காஸ் கூறுகையில்,
“பூனையின் உரிமையாளரை தேட முயன்றேன். ஆனால் எந்த பலனும் இல்லை. பூனையின் உரிமையாளர் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. பூனை என்னை விட்டு ஒரு நொடிகூட விலகுவதில்லை. மீட்கப்பட்டதில் இருந்து அது சோகமாக இருக்கிறது என்றார்.