துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 3 நாட்களுக்கு முன்பே கணித்த டச்சு ஆராய்ச்சியாளர்? வைரலாகும் டுவிட்டர் பதிவு...!
துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை, டச்சு ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் ஹூகர்பீட்ஸ் (frank hoogerbeets) என்பவர் மூன்று நாட்களுக்கு முன்பே துல்லியமாகக் கணித்து வரைபடத்துடன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
7.8 ரிக்டராக பதிவாகிய துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரையில் 5000ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பலி எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் எனவும் மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று நாள்களுக்கு முன்பே கணிப்பு
இந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பே டச்சு ஆராய்ச்சியாளரான ஃப்ராங்க் ஹூகர்பீட்ஸ் இந்த நிலநடுக்கம் குறித்து கணித்து, துல்லியமாக டுவீட் செய்துள்ளமை தற்போது இலட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்து, அதிகளவில் பகிரப்பட்டுவருகிறது.
பெப்ரவரி 3ஆம் திகதியன்று அவர் பகிர்ந்த டுவிட்டில், "மத்திய மற்றும் தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது" என்று வரைபடத்துடன் கூறியிருந்தார்.
அவர் கணித்து கூறியதுபோலவே, நேற்றுக் காலை துருக்கி - சிரியா எல்லையில் 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஆராய்ச்சியாளர் ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ்
நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ், SSGEOS என்ற புவியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.
துருக்கி நிலநடுக்கத்தால் தனது மனது நிம்மதியை இழந்துள்ளது எனக் கூறியுள்ள இவர், "நான் முன்பே கூறியது போல், 115 மற்றும் 526ஆம் ஆண்டுகளைப் போலவே இந்த பிராந்தியத்தில் கூடிய சீக்கிரத்தில் அல்லது தாமதமாகவோ பூகம்பம் நிகழும். இந்த நிலநடுக்கங்கள் எப்போதுமே முக்கியமான கிரக வடிவவியலால் ஏற்படுகின்றன.
மத்திய துருக்கி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் கூடுதலான வலுவான நில அதிர்வு நடவடிக்கைகளைக் கவனியுங்கள். ஒரு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு, நில அதிர்வுகள் பொதுவாக சிறிது நேரம் நீடிக்கும்" என்று நிலநடுக்கத்துக்கு பிந்தைய தனது பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
This guy has been predicting earthquakes based on lunar & planetary geometry models & though many of his predictions have come up empty, a few, in particular this recent one in the Turkish/Syrian border was eerily accurate. Still looking at prediction accuracy; looks quite low. https://t.co/EbFCvmMNGA
— Dr Hyelander 🇦🇲 🌋 (@Helioprogenus) February 6, 2023

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.