துருக்கி ஜனாதிபதி தேர்தல்; 2 ஆம் சுற்று வாக்கெடுப்புக்கு செல்லும் நிலை!
துருக்கியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி தையீப் அர்துகான் முதலிடம் பெற்றுள்ளார்.
துருக்கியின் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நேற்று நடைபெற்றது. ஜனாதிபதித் தேர்தலில் ஏறத்தாழ அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டுள்ள நிலையில், ஏகேபி எட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி தையீப் அர்துகான் 49.42 சதவீத வாக்குகளைப் பெற்றள்ளார்.
சிஎச்பி கட்சியைச் சேர்ந்த கெமால் கிளிச்தரோலு 44.95 சதவீத வாக்குகளைப் பெற்றள்ளார். ஓடிஏ கூட்டணி வேட்பாளர் ஒகான் 5.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் , எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாதால் 2 ஆவது சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலை எதிர்நோக்கப்படுகிறது.
இந்நிலையில் முதல் சுற்றில் எவரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டால் 2 ஆவது சுற்று வாக்கெடுப்பு மே 28 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.