கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கான அறிவிப்பு
கனடாவில் வாடகை குடியிருப்பாளர்கள் இந்த ஆண்டில் மகிழ்ச்சியான செய்தியை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டது முதல் கனடாவில் தொடர்ச்சியாக வாடகை தொகைகள் அதிகரித்து செல்லும் போக்கு காணப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு வரையில் சராசரியாக வாடகை தொகை நான்கு தசம் ஆறு ஆக காணப்பட்டது.
எனினும் 2022 ஆம் ஆண்டில் இந்தத் தொகை 12.1 வீதமாக அதிகரித்திருந்தது. 2023 ஆம் ஆண்டிலும் வாடகை தொகை சராசரியாக 8.6 வீதத்தினால் அதிகரித்திருந்தது.
இவ்வாறு இந்த 2025 ஆம் ஆண்டில் வாடகை தொகைகள் குறைவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கூடுதல் அளவில் வாடகை வீடுகள் சந்தையில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் வாடகை தொகைகள் குறைவடையலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் முன்னணி வீட்டு மனை தொடர்பான இணையதளங்களில் ஒன்றான ரெண்டல்ஸ் டாட் சிஏ (Rentals.ca) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.