இருபதுக்கு -20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி; மிரட்டல் விடுத்த ஐ.எஸ். அமைப்பு !
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இருபதுக்கு -20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ‘ஐஎஸ்கே’ பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
‘ஐஎஸ்கே’ பயங்கரவாத கும்பல்
‘ISK’ அல்லது ‘I.S. கொரசான்’ ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். , ஒரு பயங்கரவாதக் குழு. சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்ட முக்கிய ஐ.எஸ்., ஆப்கானிஸ்தானின் கொரசான் மாகாணத்தில் இந்த பயங்கரவாதக் குழு உருவானது.
இன்று ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு தடையாக இந்த ‘ஐஎஸ்கே’ பயங்கரவாத கும்பல் மாறியுள்ளதுடன் அவர்கள்தான் ஆப்கானிஸ்தானில் வன்முறையை செய்கிறார்கள்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில், இந்திய-பாகிஸ்தான் போட்டியை தாக்கப்போவதாக ‘ஐஎஸ்கே’ பயங்கரவாத கும்பல் மிரட்டல் விடுக்கும் வீடியோவை வெளியிட்டது,
இந்நிலையில் அந்த மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என நாசாவ் மாநில பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜூன் 6-ம் திகதி நடைபெறவுள்ள இந்திய-பாகிஸ்தான் போட்டிக்கு சிறப்பு பாதுகாப்பு போட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐஜிபி தெரிவித்துள்ளார்.