காசா யுத்த நிறுத்தத்தால் மீண்டும் இணைந்த இரட்டையர்கள்!
எதிர்பாராதவிதமாய் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தில் பிணையாளிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேல் இரட்டை சகோதரர்கள் தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பிடித்து செல்லப்பட்ட இரட்டையர்கள் ஈராண்டுகள் வெவ்வேறு இடங்களில் தனித் தனியாகப் பிரிந்து வாடினர்.
காஸாவில் யுத்த நிறுத்தம் நடப்புக்கு வந்த பின் விடுவிக்கப்பட்டு இப்போது மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
காலி - ஸிவ் பெர்மன் (Gali, Ziv Berman) சகோதரர்கள். அவர்கள் மீண்டும் சந்தித்த உணர்வுபூர்வமான தருணத்தின் புகைப்படங்களை லண்டனில் இருக்கும் இஸ்ரேலியத் தூதரகம் X தளத்தில் வெளியிட்டடுள்ளமை இணையவாசிகள் பலரை மனம் நெகிழ வைத்துள்ளன.