மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் Twitter நடத்தப்படமாட்டாது!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் Twitter தளத்தைச் செல்வந்தர் இலோன் மஸ்க் வாங்கியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Twitter தளம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் இனி நடத்தப்படமாட்டாது"என டிரம்ப் தமது சொந்த சமூகத் தளமான Truth Social தளத்தில் தெரிவித்தார்.
டிரம்ப் மீது Twitter முன்னதாக விதித்திருந்த தடையை மஸ்க் மீட்டுக்கொள்வார் என்று முன்னர் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் மீண்டும் Twitter தளத்தில் சேர்வாரா என்பது குறித்து டிரம்ப் தகவல் அளிக்கவில்லை. இருப்பினும், அவருக்கு மஸ்க்கைப் பிடிக்கும் என்று கூறிய டிரம்ப் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதேசமயம் நான் இல்லாமல் Twitter தளம் வெற்றிபெற முடியாது" என்றும் முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.