வெளிநாடொன்றில் இடம்பெற்ற இரு விபத்துக்கள்... 18 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப், சிந்து பகுதிகளில் இடம்பெற்ற சாலை விபத்துகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து இஸ்லாமாபாத்தின் பகவால்பூர் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து, பதே ஜங் என்ற பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தாகவும், பெண்கள் உட்பட 22 பேர் படுகாயமடைந்து பெனாசீர் பூட்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் மட்டும் இஸ்லாமாபாத்தில் உள்ள தலைமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிந்துவின் நவுஷாஹ்ரோ பெரோஸ் மாவட்டத்தில், மோரோ அருகே எம்-6 மோட்டார்வேயில் ஒரு லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 13 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.