முதியோர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசடிகள்: இருவர் கைது

Canada Crime
By Kamal Apr 13, 2026 04:35 PM GMT
Report

 முதியோர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முதலாவது சம்பவத்தில், குயல்ப் (Guelph) நகரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2025 ஜூலை மாதத்தில், 90 வயதுக்கு மேற்பட்ட மூன்று முதியவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்நபர், தான் ஒரு வங்கி அதிகாரி எனப் பொய்யாகக் கூறி அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுள்ளார்.

முதியோர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசடிகள்: இருவர் கைது | Two Charged For Bank Investigator Scams

பாதுகாப்பு காரணங்களுக்காக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை "அழிக்க வேண்டும்" என நம்பவைத்து, நேரில் சென்று அவற்றைப் பெற்றுள்ளார்.

பின்னர் அந்த கார்டுகளைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான டாலர்களை அவர் செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் விளைவாக, அவர் மீது 5,000 டாலருக்கும் அதிகமான மோசடி மற்றும் கடன் அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இதேபோன்ற மற்றொரு மோசடிச் சம்பவம் ஹாமில்டன் (Hamilton) பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அங்கு வங்கியின் புலனாய்வு அதிகாரி போலப் பேசிய ஒருவர், முதியவர் ஒருவரின் வங்கிக் கணக்கு பணமோசடி நடவடிக்கைகளில் சிக்கியுள்ளதாகக் கூறி பயமுறுத்தியுள்ளார்.

அந்தப் பணத்தைப் பாதுகாப்பான வேறொரு கணக்கிற்கு மாற்றுமாறு அவர் அறிவுறுத்தியதை நம்பி, முதியவரும் பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளார்.

இது தொடர்பாக ஹாமில்டனைச் சேர்ந்த 25 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது 5,000 டாலருக்கும் அதிகமான நிதி மோசடி மற்றும் சட்டவிரோதமாகச் சொத்து சேர்த்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவங்கள் குறித்துப் பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US