இங்கிலாந்தின் Roadford Lake இல் இருவர் மாயம்
இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள டெவோன் ஏரியில் (Roadford Lake) படகு கவிழ்ந்ததில் நால்வர் மீட்கப்பட்ட நிலையில் இருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த அனர்த்தத்தில் மீட்கப்பட்ட நால்வரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ல நிலையில் , அவர் தொடர்ந்து டெரிஃபோர்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து காவல்துறை, தீயணைப்பு, விமான அம்பியூலன்ஸ் மற்றும் கடலோர காவல்படை சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
அதோடு ஒரு சாலை மூடி வைக்கப்பட்டது மற்றும் ஏரி தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , காணாமல் போனவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.


