இத்தாலியில் படகு மூழ்கியதில் புலம்பெயர்ந்தோர் இருவர் பலி
இத்தாலிய நகரமான சிசிலியின் தென் கிழக்கே 17 மைல் தொலைவில் 30 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் இரண்டு புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளதுடன் மற்றும் ஒருவரைக் காணவில்லை என்று இத்தாலிய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை பிற்பகுதியில் கடலோர காவல்படை படகு மற்றும் ஒரு விமானம் அப்பகுதிக்கு சென்று, 34 பேரை மீட்டு, சைராகுஸ் துறைமுகத்திற்கு கொண்டு சென்றது என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு புலம்பெயர்ந்தவர் துறைமுகத்திற்கு வந்தபோது இறந்தார், மற்றொருவர் மருத்துவமனையில் இறந்தார். காணாமல் போன ஒருவரை தேடி வருவதாக கடலோர காவல்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
படகில் இருந்த குடியேற்றவாசிகள் சிரியா, எகிப்து மற்றும் வங்காள நாட்டினர்.
மேலும் UN தரவுகளின்படி, 2014 முதல் மத்திய மத்தியதரைக் கடலில் 23,500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்