இங்கிலாந்தில் மாயமான மூன்று இலங்கையர்களில் இருவர் கண்டுபிடிப்பு
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்கு பங்குகொள்ள சென்ற இலங்கையர்களில் மூவர் மாயமான நிலையில் இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் காணாமல் போன மூன்று பேரில் ஒருவரை இன்னும் காணவில்லை என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது போட்டியில் விளையாட சென்ற ஒரு மல்யுத்த வீரர், ஜூடோ நட்சத்திரம் மற்றும் ஜூடோ பயிற்சியாளர் திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளனர். மூவரும் முன்னதாகவே தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைத்ததால் இங்கிலாந்தை விட்டு வெளியேற முடியவில்லை.
இந்நிலையில் அவர்கள் காணாமல் போனதை அடுத்து, பர்மிங்காமில் உள்ள இலங்கை அணியில் எஞ்சியிருந்த அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் அதிகாரிகள் தற்போது ஆவணங்களை அகற்றியுள்ளனர்.
இதனையடுத்து மாயமான இரண்டு பேர் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு காணாம் போனோர் இரண்டு பேரில் 30 வயதுடைய ஒரு பெண் மற்றும் 40 வயதில் ஒரு ஆணும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
அவர்கள் ஒகஸ்ட் முதலாம் திகதி காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில் இருவரும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் கூறியுள்ளனர்.