நேபாள அனர்த்தம் ; 9 நாட்களின் பின் மண்ணுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர்
Nepal
Death
Flood
By Vironika
நேபாளத்தில் பனிப்பாறை மற்றும் சேறு சரிவு ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு, மேல் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த (சஞ்சய் சா )மற்றும் (கபீர் மகர்ஜன் )ஆகிய இரண்டு தொழிலாளர்கள் இன்று (04) உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சுரங்கப்பாதைக்குள் இருந்து சத்தம் கேட்டதை அடுத்து, இராணுவம், காவல்துறை மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் இந்தப் பிரதான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட இருவரும் தலைநகர் காத்மண்டுவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஆகஸ்ட் 26 அன்று நேரிட்ட இந்தப் பேரிடரால் 1,200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் திட்டச் சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US