பாபா வங்காவின் கணிப்பில் அடுத்தடுத்து நடந்த இரண்டு அதிர்ச்சி சம்பவங்கள்!
2024ல் பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறது என்று பாபா வங்கா கணித்துள்ளார்.
அவரின் கணிப்பில் அடுத்தடுத்து 2 முக்கியமான சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் அது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, 2024ல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகள் வந்து தாக்கும் என்றும் இதனால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து மக்கள் பஞ்சத்தால் அழிய போகிறார்கள் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த நாட்டுக்காரரின் கையால் ஒரு பெரிய ரஷ்ய தலைவர், கொலை செய்யப்படுவார். அவரது கொலை உலகத்தை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியது என்று தெரிவித்துள்ளார் . அதாவது விளாடிமிர் புடினின் மரணம் பற்றி கூறியுள்ளார்.
2024-ம் ஆண்டில் பெயரிடப்படாத "பெரிய நாடு" உயிரியல் ஆயுதத் தாக்குதல்களை உருவாக்கும். அதை வைத்து தாக்குதல்களை மேற்கொள்ளும் அதே வேளையில், ஐரோப்பா வேறு விதமான பயங்கரவாதத் தாக்குதல்கள் நாடாகும் என்றுள்ளார்.
2024-ல் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்கொள்ள உள்ளோம். இதற்கு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்க வேண்டும். கடன் அளவுகள் உயரும் மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் உலகப் பொருளாதாரத்தை குழப்பத்தில் ஆழ்த்தும் அபாயம் இருப்பதாக கூறியுள்ளனர்.
புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் இருக்கும். உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடிய போர் ஒன்று நடக்கும். இதே வருடம் நாம் ஏலியன்களை காண்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்தடுத்து நடந்த இரண்டு அதிர்ச்சி சம்பவம்:
ஜப்பானில் புத்தாண்டு தினத்தில் சுனாமி ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள மியாமியில் இருக்கும் மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக வெளியாகும் செய்திகள் இணையத்தை உலுக்கி உள்ளன.
10 அடி உயரமுள்ள வேற்றுகிரக ஏலியன் ஒன்று மியாமி ஷாப்பிங் மாலில் சுற்றித் திரிந்ததாக புகார்கள் வந்ததால், அப்பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் 2 நாட்களுக்கு முன் நடந்து உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.